Overblog
Edit post Follow this blog Administration + Create my blog
Arunapuram Aathi Koothandavar Kovil
Arunapuram Aathi Koothandavar Kovil
Menu
Sri Aadhi Koothandavar swami thiruvilaiyaadal

Sri Aadhi Koothandavar swami thiruvilaiyaadal

Sri Aadhi Koothandavar swami thiruvilaiyaadal

சுவாமியின் திருவிளையாடல்

எங்கள் அருணாபுரம் கிராமத்தில் உள்ள ஸ்ரீ கூத்தாண்டவர் சுவாமி சுமார் 511 ஆண்டுக்கு முன் வேலூர் மாவட்டம் மேல் செங்கம் கிராமத்தில் ஒரு பக்தர் பெட்டியில் வைத்து தினம் பூஜை செய்து வந்ததாகவும்அந்த பெட்டியை திருடன் பண பெட்டி நகை ஆபரண பெட்டி என்று தூக்கி வந்துவிட்டான். அந்த நாளில் நடை பயணம் என்பதால் நடந்து வரும் பொது எங்கள் கிராமத்திற்கும் பக்கத்தில் உள்ள கல்லந்தல் எல்லையில் செவந்தல் ஏரி அருகில் உள்ள முனியப்பன் கோவில் பாறையில் பெட்டியை பாரம் தாங்காமல் கீழே வைத்துவிட்டுதி ருடன் அயர்ந்து உட்கார்ந்தான் அப்போது பெட்டி திறந்து சுவாமி பக்கத்தில் உள்ள அத்தி மரத்தில் ஏறி அமர்ந்து விட்டதாகவும் அதைகண்டு திருடன் பயந்து ஓடிவிட்டதாகவும் முன்னோர்கள் கூறுகிறார்கள். பிறகு அருணாபுரம் மக்கள் முக்கியஸ்தவர் கனவில் சென்று நான் அருணாபுரம் கிராமத்திலுள்ள பெரிய ஏரிக்கு எதிரே உள்ள காட்டு குகைக்குள் நான் தங்கி இருப்பதாக சொற்பனத்தில் கூறியதால் அருணாபுரம் பொது மக்கள் மேளதாளத்துடன் சுவாமியை அழைத்து சென்று காட்டு குகை கோவிலில் அமரச் செய்து விட்டு வந்தனர்.

பிறகு கொஞ்ச நாள் கழித்து கோவிலின் வாயிலின் முன் மரத்தாலான கதவை செய்து அமைத்தனர். அந்த கதவு மறு நாள் காலையில் கோவிலின் எதிரே உள்ள ஏரியில் கிடைத்ததாகவும் ந்த கதவு தான் தற்சமயம் அருணாபுரம் மாரியம்மன் கோவில் வாயிலில் கதாவாக போடபட்டுள்ளதகவும் முன்னோர்கள் கூறுகின்றனர் சுவாமி கிராமத்தை பார்த்து கொண்டு இருக்க வேண்டும் என்னை மறக்க வேண்டாம் என்றும் அதனால் தான் கதவை வெளியே எரிந்து விட்டதாகவும் சொற்பனத்தில் கடவுள் சொன்னதாகவும் முன்னோர்கள் கூறுகின்றனர். கடந்த 13.04.15 அன்று இரவு கோவிலின் கிரில் கதவு பூட்டை உடைத்து சுவாமியை தூக்கி பக்கத்திலுள்ள மலை பொந்தில் போட்டு சென்றனர். அந்நிகழ்ச்சி மறு நாள் காலை 5 மணி முதல் காட்டு தீபோல் பரவி பக்தர்கள் மனதில் புகுந்து சுவாமி ஆடி சுவாமி இருந்த பொந்துக்கு அழைத்து சென்று சுவாமி இருக்கும் இடத்தை காட்டியது. திரும்ப அருணாபுரம் கிராம மக்கள் அனைவரும் அழுத கோலமாக சுவாமியை தூக்கி வந்து கோவிலில் வைத்து பூஜை செய்து விட்டு வந்தனர். இப்படியெல்லாம் ஆண்டவன் இன்னும் நிறைய திருவிளையாடல் எல்லாம் புரிந்து மக்களுக்கு காட்சி கொடுத்து இருக்கிறார் என்று நம் முன்னோர்கள் கூறுகின்றனர்.